கல்லூரியில் டிராப் அவுட்...அவுஸ்திரேலியாவில் வென்று காட்டிய இந்திய இளம் தொழிலதிபர்!
"டிராப்அவுட் சாய்வாலா” என்ற நிறுவனத்தை தொடங்கி டீ விற்பனையாளராக மாறிய இந்தியர்.
வருவாய் கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள்.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவுஸ்திரேலியாவில் டீக்கடையை ஆரம்பித்த இந்திய இளைஞர், தற்போது பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்திற்கு உரிமையாளர் ஆகியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சஞ்தித் கொண்டா ஹவுஸ்(sanjith konda house) என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவில் முன்னணி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகவியல் (BBA) இளங்கலை பட்ட படிப்பை படித்து வந்தார்.
ஆனால் அவருக்கு சிறு வயது முதலே தேநீர் பற்றிய எண்ணம் கவர்ந்து வந்ததால் தனது பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் “டிராப்அவுட் சாய்வாலா” (dropout chaiwala) என்ற நிறுவனத்தை தொடங்கி டீ விற்பனையாளராக மாறியுள்ளார்.
இது தொடர்பாக சஞ்சித் தெரிவித்துள்ள தகவலில், நான் இங்கு லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டத்தை படிக்க வந்தேன், ஆனால் எனது படிப்பை நான் பாதியிலேயே நிறுத்தி விட்டு, எனது சொந்த நிறுவனத்தை தொடங்க விரும்பினேன்.
மெல்போர்ன் உலகின் காபி தலைநகரம், இதற்கு மாறாக நான் ஒரு டீ ஜாயிண்டை(Tea joint) திறக்க திட்டமிட்டேன், அதற்கான திட்டத்தை அசார் என்ற என்ஆர்ஐ ஒருவரிடம் தெரிவித்த போது அவரும் இந்த திட்டத்தை நம்பி முதலீட்டாளராக மாற முடிவு செய்தார் என சஞ்சித் தெரிவித்துள்ளார்.
சிறுவயது முதலே எனக்கு தேநீரின் மீது விருப்பம் இருந்தது, எனவே “டிராப்அவுட் சாய்வாலா” நிறுவனத்தை தொடங்கி, இந்திய தேயிலையின் சுவையை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக சஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம்:
நிறுவனத்தின் ஆண்டு வருமானம், அடுத்த மாதம் வரி விலக்குகள் மற்றும் அனைத்து மேல்நிலைகளையும் செலுத்திய பிறகு, அவர்களின் வருவாய் கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் என சஞ்சித் தெரிவித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தில் இந்திய மாணவர்களை தங்கள் வருமானத்திற்கு துணையாக பகுதி நேர வேலைகளுக்கு அமர்த்தியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: கெட்ட எண்ணத்தால் சாலையில் விழுந்து வாரிய இளம் பெண்: வைரல் வீடியோ
அவுஸ்திரேலியர்கள் விரும்பும் தேநீர் வகைகள்:
அவுஸ்திரேலியர்கள் அதிகமாக இந்திய மசாலா சாய் மற்றும் பக்கோடா-க்களை விரும்புவதாகவும், அந்த இடத்தின் இந்திய சமூகத்தினரிடையே பம்பாய் கட்டிங் மிகவும் பிரபலமானது என சஞ்சித் தெரிவித்துள்ளார்.