கெட்ட எண்ணத்தால் சாலையில் விழுந்து வாரிய இளம் பெண்: வைரல் வீடியோ
பிடி எதுவும் கிடைக்காமல் கீழே விழுந்த இளம்பெண்.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு.
சாலையில் பைக் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை உதைத்து கீழே தள்ள முயற்சித்து,பெண் ஒருவர் கீழே விழுந்து வாரிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் சமூக ஊடகத்தில் பரவி டிரெண்டாகி வரும் வீடியோ காட்சி ஒன்று அமைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு Reddit பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு காருக்கு முன்னால் இரண்டு பைக்குகள் செல்வது காட்டப்படுகிறது, அதில் ஒரு பைக்கில் ரைடர் ஆண் ஒருவரும், பின் இருக்கையில் பெண் ஒருவரும் பயணிக்கின்றனர், மற்றொரு பைக்கில் பெண் ஒருவர் மட்டும் பயணிப்பது தெரிகிறது.
இரண்டு வாகனங்களும் ஒன்றுக்கொன்று இணையாக சென்று கொண்டிருந்த போது, ஆண் ஒருவருடன் பைக்கில் அமர்ந்திருந்த பெண், ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்த பெண்ணை உதைக்க முயன்றார்.
ஆனால் அந்த பெண் தனது சொந்த சமநிலையை இழந்து தனது பைக்கில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த பெண் இரு கைகளிலும் எதையோ வைத்திருந்த காரணத்தால், பிடி எதுவும் கிடைக்காமல் விழுந்து புரண்டது தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கனேடிய தேர்தலில் சீனா விளையாடுகிறது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
இந்த வீடியோவிற்கு இணையத்தில் கருத்து தெரிவித்து இருந்த பயனர்கள் ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் எதிர்வினை உண்டு என தெரிவித்துள்ளனர்.