இது அமித் ஷாவா.. சந்தான பாரதியா! பாஜக ஒட்டியுள்ள போஸ்டரை கிண்டலடித்த காங்கிரஸ்
இந்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில், அமித் ஷா படத்திற்கு பதிலாக இயக்குநர் சந்தான பாரதி படம் இடம்பெற்றுள்ளதை கார்த்தி சிதம்பரம் கிண்டல் அடித்துள்ளார்.
போஸ்டரால் குழப்பம்
தமிழ் சினிமாவில் நடிகர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் சந்தான பாரதி. இவருக்கும், மத்திய அமைச்சருக்கும் ஒற்றுமை இருப்பதால், சில சமயங்களில் பாஜக ஒட்டும் போஸ்டர்களில் அமித் ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி படத்தை ஒட்டுகின்றனர்.
இதனால், அமித் ஷாவையும், சந்தான பாரதியையும் வைத்து ட்ரோல் செய்யும் அளவுக்கு கூட ட்ரெண்டாகி இருக்கிறது.
இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக அமித் ஷா இன்று மதுரைக்கு வருகிறார்.
இதற்காக, பாஜக ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமித் ஷா படத்திற்கு பதில் சந்தான பாரதி படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக 'சந்தான பாரதி ஃபேன் கிளப்’என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |