32 ஆண்டுகள் கழித்து மகனைக் காண உணவோடு காத்திருந்த தாய்., உடல் மட்டுமே வரும் சோகம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட சாந்தன், இலங்கை செல்லவிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.
30 ஆண்டுகள் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் இருந்த சாந்தன், இலங்கைக்கு செல்லவிருந்த நிலையில், தாயகம் திரும்பும் ஒரு நாளுக்கு முன்பே உடல்நலக் குறைவால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.
32 ஆண்டுகள் கழித்து வரும் மகனைப் பார்ப்பதற்காக இலங்கையில் உணவோடு காத்திருந்த சாந்தனின் தாய்க்கு இது பேரதிர்ச்சியான செய்தியானது.
மகனை நேரில் பார்த்து அரவணைக்க காத்திருந்த நிலையில், அவர் உயிரற்று வெறும் உடலாக மட்டுமே தயக்கத்தை அடையவுள்ளார்.
மறுநாள் வீட்டிற்கு வரவுள்ள மகன் சாந்தனுக்காக அவரது தாய் சில உணவப் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு இலங்கையில் காத்திருந்ததாகவும், அதுபோக சில உணவுகளை சாந்தனின் தம்பி மதிசுதாவிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சாந்தன் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு (பிப்.27) அவரது சகோதரன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அவரை சந்தித்தார். அந்த காணொளியும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும், மீண்டும் சிறைபிடித்த்து போல, மேலும் இரண்டு ஆண்டுகள் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு, கடைசியில் இலங்கைக்கு அனுப்பிவைக்க அனுமதிப்பட்ட பிறகும், பிணமாக மட்டுமே தாயகம் திரும்புகிறார் சாந்தன்.
இந்த நிலைக்கு யார் காரணம் என்பது குறித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தியாகு கூறிய கருத்துக்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |