வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா: அவர் செய்த குற்றம்
சவுதி அரேபியாவில் சொந்த தந்தையை கொடூரமாக தாக்கி, கொலை செய்து உடலை துண்டாக வெட்டிய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றம்
குறித்த நபர் அமெரிக்க குடிமகன் எனவும், அந்த தந்தை எகிப்தியர் எனவும் கூறப்படுகிறது. புதன்கிழமை தலைநகர் ரியாதில் வைத்து பிஷாய் ஷெரீப் நஜி நசீப் என்ற அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றே தெரிவித்துள்ளனர்.
@getty
சவுதி அரேபியாவின் உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் தனது எகிப்திய தந்தையை அடித்து துன்புறுத்தி கழுத்தை நெரித்து கொன்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நசீப் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளார் எனவும், கொலைக்குப் பிறகு அவரது தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டினார் என்றும் கைது செய்யப்படுவதற்கு முன்பு மற்றொரு நபரைக் கொல்ல முயன்றார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நசீபுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லை என்றாலும், சவுதி அரேபியாவில் கொடூர குற்றத்திற்கான மரண தண்டனை என்பது தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றுவதே என கூறுகின்றனர்.
மரணதண்டனை விகிதம் அதிகரிப்பு
மேலும், நசீபுக்கு அமெரிக்காவில் குடியிருப்பு முகவரி உள்ளதா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை. மட்டுமின்றி அவரது வயது உட்பட எந்த தகவலையும் சவுதி அரேபிய நிர்வாகம் வெளியிடவில்லை.
@reuters
இதனிடையே, நசீபின் மரணம் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அலுவலகத்தால் கூடுதல் தகவல்களை வழங்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் அவரது தந்தையும் ஆட்சிக்கு வந்த பிறகு, சவுதி அரேபியாவின் வருடாந்திர மரணதண்டனை விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றே குற்றஞ்சாட்டப்படுகிறது.
2022 ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், 2015 முதல் சவுதி அரேபியாவில் 1,000 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரை 91 பேர்களுக்கு மரண தனடனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் 19 பேர்கள் வெளிநாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |