80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியுள்ள நாடு! இந்தியா நன்றி
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சவூதி அரேபியா கொடுத்து உதவியுள்ளது.
கடந்த சில நாட்களாக தினசரி 3,00,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடி வருகிறது.
மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய சிகிச்சை பெறமுடியாமல் தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிவருகின்றன.
நாட்டில் அதிகரித்து வரும் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்ய, 'ஆக்ஸிஜன் மைத்ரி' செயல்பாட்டின் கீழ் கொள்கலன்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க இந்தியா பல்வேறு நாடுகளை நாடியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜேர்மனி , பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் என பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்நிலையில், சவூதி அரேபியா உடனடியாக இந்தியாவுக்கு ஆதரவை அளித்துள்ளது.
80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனைக் கொண்ட 4 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் கொண்ட கப்பல் விரைவில் சவூதி அரேபியாவிலிருந்து கடல் வழியாக இந்தியாவை எட்டவுள்ளது.
அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் விநியோக ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் "சவுதி அரேபிய இராஜ்ஜியத்தின் உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு எங்கள் மனமார்ந்த நன்றி" என கூறியுள்ளது.
#سفارة_الهند_للمملكة: نشكر المملكة على إرسال 80 مليون طن من الأكسجين السائل إلى #الهند لمواجهه التفشي الحاد لڤيروس #كورونا.
— صحيفة مكة (@makkahnp) April 25, 2021
@IndianEmbRiyadh #صحيفة_مكة pic.twitter.com/ZrFZ1gDJkE