சவுதி பட்டத்து இளவரசரைப் பார்த்து ட்ரம்ப் கேட்ட அந்த கேள்வி: சங்கடத்தில் நெளிந்த இளவரசர்
சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக வர்த்தக நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சவுதி பட்டத்து இளவரசரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
சங்கடத்தில் நெளிந்த இளவரசர்
ட்ரம்ப் சவுதி பட்டத்து இளவரசரான MBS என அழைக்கப்படும் முகம்மது பின் சல்மானைப் பார்த்து ட்ரம்ப் கேட்ட அந்தக் கேள்வி, முகம்மது, நீங்கள் இரவில் தூங்குவீர்களா? எப்படி தூங்குவீர்கள் என கேட்டார்.
'How do you sleep at night? You toss and turn all night'
— RT (@RT_com) May 13, 2025
This is how Trump praises MBS for his leadership in the Middle East pic.twitter.com/qSowfjXTd1
அந்தக் கேள்விக்கு சங்கடமாக நெளிந்தபடி ஏதோ பதில் சொன்னார் MBS.
நீங்கள் இரவில் தூங்குவீர்களா? எப்படி தூங்குவீர்கள் என கேட்ட ட்ரம்ப், நம்மில் சிலரைப்போல, முகம்மதுவாலும் இரவில் சரியாக தூங்கமுடியாது.
அவர் தூங்காமல், இரவு முழுவதும் உருண்டு புரண்டுகொண்டே இருப்பார் போலிருக்கிறது, எப்போதும், என் நாட்டை நான் எப்படி மேலும் சிறந்த நாடாக்குவது என எண்ணிக்கொண்டே இருப்பார் போலும் என்றார் ட்ரம்ப்.
அதாவது, ஒரு காலத்தில் எப்படியோ இருந்த நாட்டை, விமர்சனங்களையெல்லாம் மேற்கொண்டு இன்று ஒரு வெற்றிகரமான வர்த்தக மையமாக மாற்றிவிட்டார் முகம்மது என புகழ்வதற்காகத்தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார் ட்ரம்ப்.
ட்ரம்பின் கேள்வியைக் கேட்டு முகம்மது சங்கடத்துடன் புன்னகைக்க, அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |