ஹஜ் விசா விதிகளை மீறினால்... பல ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கும் சவுதி அரேபியா
ஹஜ் விசா விதிகளை மீறுபவர்களுக்கு 26,000 டொலர் வரை அபராதம் மற்றும் சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தடையும் விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா விசாவுடன்
தண்டனையைத் தவிர்ப்பதற்காக வரவிருக்கும் பருவத்திற்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள உத்தியோகப்பூர்வ அனுமதி பெறுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாமல் அல்லது சுற்றுலா விசாவுடன் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 5,332 டொலர் (20,000 SAR) அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஒருவர் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்து, அந்த நபர் உரிய அனுமதியின்றி ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முயற்சி செய்தால் 26,000 டொலர் (100,000 SAR) வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹஜ் காலத்தில் மெக்கா அல்லது புனித தலங்களில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை அழைத்துச் செல்லும் எவருக்கும் இந்த விதி பொருந்தும்.
ஒவ்வொரு விதி மீறலுக்கும்
அத்துடன் ஹஜ் காலத்தில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை ஹொட்டல்களில், குடியிருப்புகளில், தனியார் விடுதிகளில், அல்லது புனித யாத்திரை செல்வோருக்கான குடியிருப்புகளில் தங்க வைத்திருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
மட்டுமின்றி, அவர்களை மறைத்து வைப்பது அல்லது மெக்காவில் அல்லது புனித தலங்களில் தங்குவதற்கு உதவும் எந்தவொரு நபருக்கும் இந்த அபராதம் பொருந்தும்.
மேலும் ஒவ்வொரு விதி மீறலுக்கும் அபராதத் தொகை அதிகரிக்கும், அத்துடன் 10 ஆண்டுகளுக்கு சவுதி அரேபியாவில் நுழைய அவர்கள் விலக்கப்படுவார்கள். இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரையானது ஜூன் 6ம் திகதி தொடங்கி ஜூன் 11ம் திகதி முடிவுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |