ரஷ்ய பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் அபாயம்! இதுதான் காரணம்..மீண்டும் எச்சரித்த CEO
ரஷ்ய மத்திய வங்கியின் இறுக்கமான பணவியல் கொள்கை நாட்டை மந்தநிலைக்குள் தள்ளும் அபாயம் உள்ளதாக Sberbank தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஏற்றுமதி வருவாய்
பலவீனமான உலகளாவிய எண்ணெய் விலைகள், வலுவான ரூபிள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தளங்கள் மீது உக்ரேனிய தாக்குதல்கள் அதிகரித்து வரும் உக்ரேனிய தாக்குதல்கள் ஆகியவை காரணமாக ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைத்துள்ளது.
ஆகத்து மாதத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் தொடர்ந்து நான்காவது மாதமாக சரிந்து, மொத்தம் 505 பில்லியன் ரூபிள் ஆக இருந்ததாக Kommersantயின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய Sberbankயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்மன் கிரெஃப் ரஷ்ய பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்வதாக எச்சரித்துள்ளார்.
பணவியல் கொள்கை
இதற்கு காரணம் ரஷ்ய மத்திய வங்கியின் இறுக்கமான பணவியல் கொள்கைதான் என்று அவர், தனது கடந்தகால எச்சரிக்கைகளை மீண்டும் கூறுகிறார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், "ஜூலை மற்றும் ஆகத்து மாத தரவுகள் நாட்டின் வளர்ச்சி இப்போது பூச்சியத்தை நெருங்கி வருகிறது. வட்டி விகிதம் என்பது ஒரு முக்கிய காரணி ஆகும். Sberbankயின் உள்மதிப்பீட்டின்படி, ஆண்டு இறுதிக்குள் விகிதம் சுமார் 14 சதவீதம் ஆக இருக்கும்.
பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்க இது போதுமானதா? எங்கள் பார்வையில் அது இல்லை.
தற்போதைய பணவீக்க அளவைக் கருத்தில் கொண்டு, விகிதம் 12 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போது மட்டுமே மீட்சியை எதிர்பார்க்க முடியும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |