சீனாவில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: மாணவிகள் உட்பட 11 பேர் பலி
சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் உடற்பயிற்சி கூடத்தில் கைப்பந்து விளையாடி கொண்டு இருந்த மாணவிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவம் ஏற்பட்ட போது 19 பேர் வரை உடற்பயிற்சி கூடத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சிலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
Alamy
கட்டிட நிறுவனத்தின் தலைவர் கைது
இந்நிலையில் இடிந்து விழுந்த உடற்பயிற்சி கூடத்தை கட்டிய உள்ளூர் கட்டிட நிறுவனத்தின் தலைவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் விபத்து ஏற்பட்ட பள்ளியை மாணவர்களின் பெற்றோர் சூழ்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் பேசிய போது, பள்ளி நிர்வாகம் எனது மகள் இறந்துவிட்டால் என்று மட்டுமே கூறியது, ஆனால் இதுவரை எனது மகளின் உடலை காண்பிக்கவில்லை.
Alamy
மேலும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் முகத்தில் இரத்தமாக இருந்ததாக பெற்றோர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |