கோவிட் தடுப்பூசியால் கண் பாதிப்பு ஏற்படலாம்: அறிவியலாளர்கள் அதிர்ச்சித் தகவல்
கோவிட் என்னும் ஒரு நோய்த்தொற்று திடீரென உலகம் முழுவதும் பரவத் துவங்கியதுமே, அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டன.
பல பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கோவிட் தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க விழைந்தன.
விடயம் என்னவென்றால், இது ஒரு புதுவகைக் கிருமி. அதற்கு, முன்பு தடுப்பூசி கிடையாது. ஆகவே, அதற்கு தடுப்பூசி தயாரித்தாலுமே, அது எப்படி வேலை செய்யும் என்பது யாருக்குமே தெரியாது.
ஆக, எப்படியாவது நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற ஒரு நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு மருந்தக நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டன.
தடுப்பூசியின் பாதிப்புகள்
தடுப்பூசி கொடுக்கப்பட துவங்கியதும் கோவிட் மெல்லக் குறையத் துவங்கியது. அது தடுப்பூசியாலா அல்லது அந்த வைரஸே வீரியமிழந்துவிட்டதா என்பது யாருக்கும் தெரியாது.
இந்நிலையில், தடுப்பூசி பெற்ற பலர், குறிப்பாக, இனப்பெருக்க வயதில் இருக்கும் இளம்பெண்களுக்கு மூளையில் இரத்தக் கட்டிகள் மற்றும் இரத்தக்கசிவு உருவாவது தொடர்பாக பல செய்திகள் வெளியாகத் துவங்கின.
தடுப்பூசி பெற்ற பலர், முன்போல் தங்களால் உற்சாகமாக செயல்படவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், கோவிட் தொற்று குறைந்ததுமே இந்த செய்திகளும் கவனம் ஈர்க்காமல் சென்றுவிட்டன.
இந்நிலையில், ஃபைசர் நிறுவனம் தயாரித்த கோவிட் தடுப்பூசி, கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும், அதனால், கண் பார்வை இழப்பு ஏற்படலாம் என்றும் சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
துருக்கி நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில், கருவிழிப் படலம் அல்லது விழி வெண்படலம் (cornea) என அழைக்கப்படும் கண்ணின் முன்பகுதி ஃபைசர் கோவிட் தடுப்பூசியால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஏற்கனவே கண் பாதிப்பு கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசியாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பின்னாட்களில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நிலையில், அவர்கள் பார்வையிழக்க நேரிடலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், தாங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கெதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், கண் பாதிப்பு தொடர்பில், இன்னமும் அதிக நோயாளிகளிடமும், நீண்ட காலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |