English பேசும் குரங்குகள்... அறிவியலாளர்களை வியக்கவைத்துள்ள விடயம்
குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதாகக் கூறுவார்கள். குரங்குகளால் செய்ய முடியாத ஒரே விடயம், மனித மொழியில் பேசுவதுதான்!
குரங்குகளால் ஏன் பேசமுடிவதில்லை?
மனிதர்களின் மூளையிலுள்ள Cerebral cortex என்னும் பகுதி, அவர்களுடைய தாடையின் இயக்கத்தையும், மொழியையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தக் கட்டுப்பாடு குரங்குகளில் இல்லாததால்தான் அவற்றால் பேசமுடிவதில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அறிவியலாளர்களை வியக்கவைத்துள்ள விடயம்
ஆனால், ஆய்வாளர்கள் சிலர், சில பழைய வீடியோக்களை ஆய்வு செய்தபோது, சிம்பன்சி வகை குரங்குகள் சில, ஆங்கில வார்த்தை ஒன்றைப் பேசுவதை தற்போது கவனித்துள்ளார்கள்.
ப்ளோரிடாவிலுள்ள விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்த Johnny என்னும் குரங்கு, யார் தன்னைப் பார்க்கவந்தாலும், அம்மா (Mama) என அவர்களை அழைத்ததாக அந்த வீடியோவின் கீழ் எழுதிவைத்துள்ளார் அந்த வீடியோவை பதிவிட்டவர்.
இரண்டாவது வீடியோ, 1962ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தி வீடியோவாகும். அதில், Renata என்னும் சிம்பன்சி வகை குரங்கு, தன்னை கவனித்துக்கொள்பவர் பக்கமாக திரும்பி, mama என அழைப்பதுபோன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
1947ஆம் ஆண்டு, Keith மற்றும் Catherine Hayes ஆகியோர் ஆய்வுக்காக ஒரு குரங்கை வளர்த்தபோது, Viki என பெயரிடப்பட்ட அந்த குரங்கு, ’mama’, ’cup’ மற்றும் ’up’ என்னும் ஆங்கில வார்த்தைகளை பேசியதாக ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, நாம் நினைப்பதுபோலன்றி, குரங்குகளின் மூளையாலும் தாடையின் இயக்கத்தையும், மொழியையும் கட்டுப்படுத்த முடியலாம், அல்லது, மொழிக்கு அந்தக் கட்டுப்பாடே தேவையில்லையாக இருக்கலாம் என்கிறார் ஆய்வை மேற்கொண்டவரான Dr Axel Ekström.