புடினுக்கு சொந்தமான அரண்மனைக்கு அடியில் ரகசிய பதுங்குகுழி: கசிந்த திட்ட வரைபடங்கள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அரண்மனைக்கு அடியில் ரகசிய பதுங்கு குழி இருப்பதாக கசிந்த வரைபடங்கள் காட்டுகின்றன.
கருங்கடல் எல்லையில் ரஷ்யாவின் Gelendzhik நகரத்தில் அமைந்துள்ள புடின் அரண்மனையின் திட்ட வரைபடங்கள் கசிந்துள்ளன.
190,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த அரண்மனையில் புடினுக்கு சொந்தமான தேவாலயம், சூதாட்ட விடுதி, உடற்பயிற்சி கூடம், ஐஸ் ஹாக்கி ரிங்க் மற்றும் பொழுதுபோக்கு அறை என அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன.
இந்த அரணமனையின் மதிப்பு 1.3 பில்லியன் டொலர் (இலங்கை பண மதிப்பில் கிட்டத்தட்ட ரூபா.40,000 கோடி) என கூறப்படுகிறது.
Navalny/AP
பயங்கர பாதுகாப்பு
ஒரு குன்றின் மேல், 17,000 ஏக்கர் வனப்பகுதிக்கு மத்தியில் FSB பாதுகாப்பு சேவைகள் மற்றும் பறக்க தடை விதிக்கப்பட்ட மற்றும் படகு இல்லாத சிறப்பு மண்டலங்களால் பாதுகாக்கப்படுகிறது.
இந்த அரண்மனையின் அடியில் விரிவான சுரங்கப்பாதைகள் இயங்குவதைக் காட்டும் கட்டிடத்தின் வரைபடங்கள், இப்போது செயல்படாத ரஷ்ய ஒப்பந்தக்காரரான மெட்ரோ ஸ்டைல் நிறுமனத்தால் 2010-ல் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவை 2016 வரை கிடைத்தன.
ஆன்லைன் உள்ளடக்கத்தின் காப்பகமான வேபேக் மெஷினைப் பயன்படுத்தி, இந்த வரைபடங்களை இன்னும் அணுகலாம் என கூறப்படுகிறது.
AP
புடினுக்கு சொந்தம் - வெட்டவெளிச்சமாக்கிய அலெக்ஸி நவல்னி
புடினுக்கு சொந்தமாக இப்படி ஒரு அரண்மனை இருப்பதை 2021-ல் இத்திட்ட வரைபடங்களை வெளியிட்டு அலெக்ஸி நவல்னி வெட்டவெளிச்சமாக்கினார். அதையடுத்து ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதியில் இரங்கி புடினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால், புடின் அந்த அரண்மனை தனக்கு சொந்தமில்லை என மறுத்துவிட்டார்.
பின்னர் சில காலம் கழித்து, புடினின் பால்ய நண்பரும், பெரும்பணக்காரருமான ஆர்கடி ரோட்டன்பெர்க், அந்த அரண்மனை தனக்கு சொந்தமானது என்றும் புடினுக்கு இதில் தொடர்பில்லை என்றும் கூறினார்.
ஆனால் இந்த வளாகம் 24 மணி நேர பாதுகாப்பின் கீழ் உள்ளது என்பதாலும், அதைச் சுற்றி பறக்க தடை மண்டலம் ஏன் உள்ளது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
Alexei Navalny
கசிந்த திட்ட வரைபடங்கள்
மெட்ரோ ஸ்டைலின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைபடங்களின்படி, பதுங்கு குழிகளுக்கு அவற்றின் சொந்த காற்றோட்ட அமைப்பு மற்றும் புதிய நீர் விநியோகம் உள்ளது.
இந்தத் திட்டங்கள் நிலத்தடியில் சுமார் 50 மீட்டர் தொலைவில் இரண்டு சுரங்கங்களை வெளிப்படுத்துகின்றன. அவை மூன்று சுரங்கப்பாதை நுழைவாயில்களைக் காட்டுகின்றன.
metro-style.ru
திட்டங்களின்படி, ஒவ்வொன்றும் தடிமனான கான்கிரீட்டால் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஏராளமான புதிய நீர், காற்றோட்டம் மற்றும் கேபிள்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்கள் யாரோ ஒருவர் உயிர் பிழைப்பதற்காகவோ அல்லது தப்பிப்பதற்காகவோ திட்டமிடப்பட்டவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
metro-style.ru
metro-style.ru