ரஃபா படையெடுப்பு... மிக ரகசிய ஆவணங்களை இஸ்ரேலுக்கு அளிக்கவிருக்கும் ஜோ பைடன்
காஸா நகரமான ரஃபா மீதான படையெடுப்பை தவிர்க்கும் நோக்கில், ஹமாஸ் தலைவர்கள் தொடர்பான தரவுகளை இஸ்ரேலுக்கு அளிக்க ஜோ பைடன் நிர்வாகம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகசிய உளவு அறிக்கை
ரஃபா பகுதியில் ஒளிந்திருக்கும் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான ரகசிய உளவு அறிக்கைகளை இஸ்ரேலுக்கு கைமாற ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக ஈருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் வரையில் இஸ்ரேலுடன் பகிர்ந்துகொள்ள தயார் என அறிவித்துள்ளனர். ரஃபா மீதான படையெடுப்பு என்பது பேரழிவில் முடியும் என்றே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கருதுகிறது.
காஸா நகரமான ரஃபாவில் இதுவரை இஸ்ரேல் வெடிகுண்டு வீசத் தொடங்கவில்லை. காஸா மக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கவும், கூடார நகரமொன்றை உருவாக்கவும் அமெரிக்கா உதவ தயாராக உள்லது.
மட்டுமின்றி, போதிய உணவு, குடிநீர் மற்றும் மருந்துக்கும் ஏற்பாடு செய்ய இது வாய்ப்பாக அமையும் என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, காஸாவின் பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலின் நெருக்கடிக்கு பயந்து தற்போது ரஃபாவில் திரண்டுள்ள 1.3 மில்லியன் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
மொத்தமாக அழிப்பது
ரஃபா மீது மிக மோசமான தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இஸ்ரேலின் இந்த கடும்போக்கு நடவடிக்கை அமெரிக்காவுக்கு கவலையை அளித்துள்ளது.
ஏற்கனவே காஸா முழுவதும் மனிதாபிமான நெருக்கடியை இஸ்ரேல் உருவாக்கியுள்ள நிலையில், ரஃபாவில் அப்படியான ஒரு சூழலை தவிர்க்கவே அமெரிக்கா முயன்று வருகிறது.
ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிப்பது தங்களது இலக்கு என கூறிவரும் இஸ்ரேல், ரஃபா தாக்குதல் கண்டிப்பாக முன்னெடுக்கப்படும் என்றே கூறிவருகிறது. ஆனால் ரஃபா நகரை மொத்தமாக சிதைத்து, ஹமாஸ் தலைவர்களை அழிப்பது என்பது எளிதான செயல் அல்ல என்றே ராணுவ நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
ரஃபா மீது முழு வீச்சிலான தாக்குதல் தொடங்கும் முன்னர் அங்குள்ள 800,000 பாலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு அளிக்கவிருந்த 2000 பவுண்டு வெடிகுண்டுகளை ஜோ பைடன் நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. குறித்த வெடிகுண்டுகள் ரஃபாவில் இஸ்ரேல் பயன்படுத்தலாம் என்ற அச்சமே காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |