உலக கோடீஸ்வரர்களின் இரகசியம் இது தான்...! நீங்களும் பணக்காரராகலாம்
பொதுவாகவே உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும்.
அது பொருளாதார வெற்றிக்கும், பாதுகாப்புக்கும் உறுதியளிக்கிறது. உலகின் பல பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இவ்வளவு கோடி சொத்துக்கு அதிபதியானது பற்றி என்றும் வெளியில் கூறுவதில்லை.
எனவே நீங்களும் ஒரு கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கடனை தவிருங்கள்
கோடீஸ்வரர்கள் வட்டி, கடன் ஆகியவற்றை தவிர்ப்பார்கள். கடனை தவிர்த்து பணத்தை சேமிக்க முன் வருவார்கள்.
சொந்த வாகனம்
கோடீஸ்வரர்கள் எப்போதும் தனக்கென ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆனால் வாடகைக்கு எப்போதும் வாகனத்தை வைத்திருக்க மாட்டார்கள்.
எதிர்பாராத செலவு நிதி
பொருளாதார பாதுகாப்பு என்பது எதிர்கால பொருளாதார பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகும். எதிர்பாராமல் செலவு அதிகரிக்குமாயின் சிறிது பணத்தை சேமித்துக் கொள்ள வேண்டும். இது கடன் வாங்குவதற்கு வழிவகுக்காது.
முதலீட்டு திட்டம்
கோடீஸ்வரர்கள் அனைவரும் நிறுவனங்கள் வழங்கும் அனைத்து வேலைவாய்ப்பு நன்மைகளையும் அனுபவித்துக்கொள்வார்கள்.
ஓய்வுகால சேமிப்பு திட்டம், சுகாதார சேமிப்பு திட்டம் மற்றும் சட்ட சேவை பணம் அனைத்தையும் பயன்படுத்துவார்கள்.
வரி ஆதாயம்
வரி பிரச்சினை வருவதற்கு முன்னர் வரி அதிகாரிகளிடம் அறிவுரைகளை பெற்று வரி ஆதாயங்களை பயன்படுத்திக்கொள்வார்கள்.
பலவகை வருமான வழிகள்
பணக்காரர்கள் எப்போதும் வருமானத்தை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். அதாவது அவர்களுடைய சொந்த வீடாக இருந்தால் அதை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கி பணம் சம்பாதித்துக் கொண்டு இருப்பார்கள்.
பொருளாதார அணுகுமுறை
பணக்காரர்கள் எப்போதும் பொருளாதார அணுகுமுறையை கடைப்பிடிப்பார்கள். அதாவது தேவையற்ற பொருட்களை வாங்க மாட்டார்கள். மேலும் சாதாரண வாழ்க்கையை வாழ ஆசைப்படுவார்கள்.
சேமிப்பு
பொருளாதார ரீதியில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ நினைப்பார்கள். அதாவது சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |