இசைக்குயில் நம்மை விட்டு பிரிந்தது! சீமான் பெரும் அதிர்ச்சி
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இசைக்குயில் என கொண்டாடப்பட்டு உயரிய விருதுகள் பலவற்றையும் வாரிக்குவித்து கலைத்துறையில் பல தசாப்தங்களாக ஆளுகைசெய்து, தேனிசைக்குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட அம்மையார் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு எனது கண்ணீர்வணக்கம் என சீமான் தெரிவித்துள்ளார்.
The Nightingale is No Longer with us!
— சீமான் (@SeemanOfficial) February 6, 2022
இந்தியாவின் இசைக்குயில் என கொண்டாடப்பட்டு உயரிய விருதுகள் பலவற்றையும் வாரிக்குவித்து கலைத்துறையில் பல தசாப்தங்களாக ஆளுகைசெய்து, தேனிசைக்குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட அம்மையார் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு எனது கண்ணீர்வணக்கம்!#RIPLataJi pic.twitter.com/U2B2kFIt7H