திடீரென மயங்கி சரிந்த சீமான்... கமெராவில் பதிவான காட்சி
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வேல கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் கூட வழங்காமல் அவர்களது குடியிருப்புகளை இடித்து அகற்றப்பட்டு வருகின்றனர்.
இதை கண்டித்தும், பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உடனடியாக வீடுகளுடன் கூடிய மாற்று வசிப்பிடங்கள் வழங்க விலியுறுத்தவும் நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதிக்கு நேரில் வந்தார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த பின், அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்த சீமான், சில நொடிகளில் மயங்கி விழுந்தார்.
எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை மீண்டும் அச்சுறுத்துகிறாரா புடின்!
உடனே அங்கிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், சீமானை தூக்கிச் சென்றனர்.
நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் செந்தமிழன் சீமான் https://t.co/r90NXcLiG0
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) April 2, 2022
ஆம்புலன்ஸில் சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @SeemanOfficial திடீர் மயக்கம்.@NaamTamilarOrg pic.twitter.com/KzSmf2rPFr
— Prakash Pandian P (@PrakashPandianP) April 2, 2022
இந்நிலையில், முதலுதவி அளிக்கப்பட்ட சீமான், சகிச்சைக்கு பின் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.