உக்ரைன் போர்: மற்றொரு மூத்த ரஷ்ய தளபதி பலி
இப்போது முடிந்துவிடும் அப்போது முடிந்துவிடும் என எதிர்பார்த்த உக்ரைன் போர் முடிந்தபாடில்லை. இருதரப்பிலும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன.
இன்று அதிகாலை உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான Kryvyi Rih மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.
CREDIT: ANATOLII STEPANOV/AFP
மற்றொரு ரஷ்ய தளபதி பலி
ரஷ்ய தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தாயிற்று. சாதாரண படைவீரர்கள் முதல் தளபதிகள் வரை பலரை ரஷ்யாவும் இழந்துள்ளது.
இந்நிலையில், மூத்த ரஷ்ய தளபதி ஒருவர் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Major General Sergei Goryachev என்னும் அந்த தளபதி, நேற்று, தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த பலத்த சண்டையில் பலியாகியுள்ளார்.
CREDIT: @mod_russia/Newsflash/@mod_russia/Newsflash
Goryachev, உக்ரைன் போரில் கொல்லப்படும் ஐந்தாவது மூத்த ரஷ்யத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
We live in a time when our freedom depends on all of us, when the world should know the full truth about every crime against freedom in one part of the world so that freedom can be preserved everywhere. pic.twitter.com/3V5beMVMno
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 13, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |