செந்தில்பாலாஜி நண்பர் வீடுகளில் சோதனை!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் இன்று மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதால் அதிர்ச்சியில் உறைந்துள்ள திமுக.
கடந்த மே மாத இறுதியில் கரூரில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இத்தகவலின் அடிப்படையில் கடந்த 12ம் தேதி அமலாக்கத்துறையினர் 19 மணிநேரமாக சோதனை மேற்கொண்டு, முடிவில் செந்தில்பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இதய அறுவைசிகிச்சையும் நடந்துமுடிந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த சோதனையின்போது சக்தி மெஸ் பங்குதாரர்கள் கார்த்தி, ரமேஷ் ஆகியோர் வீடுகளில் சில அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தற்போது அந்த சீலை அகற்றி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது திமுகவினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |