எச்சரித்த இந்தியா... பணிந்த ஐரோப்பிய நாடுகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இந்திய தடுப்பூசிகளுக்கு 7 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, இனி நாட்டிற்கு வரும் பயணிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருந்தால் அனுமதிக்கப்படுவார்கள் என 7 ஐரோப்பிய நாடுகள் அறிவித்தள்ளது.
இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் இப்போது ஆஸ்திரியா, ஜேர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்தியா அங்கீகரித்த அனைத்து தடுப்பூசிகளையும் அங்கீகரிப்பதாக எஸ்டோனியா உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இந்திய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளன.
தங்கள் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்காத வரை ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கமாட்டோம் என முன்னர் இந்திய எச்சரிக்கை விடுத்தது நினைவுக் கூரத்தக்கது.