சீனாவை மொத்தமாக ஆளவிருக்கும் ஜி ஜின்பிங் மற்றும் அந்த 6 பேர்: வெளிவரும் முழு பின்னணி
ஜி ஜின்பிங் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், முறைப்படி ஜனாதிபதியாகவும் அறிவிக்கப்பட்டார்.
ஜி ஜின்பிங் தலைமையில் 6 பேர்கள் கொண்ட உயர்மட்ட அமைப்பு இனி சீனாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையும் தெரிவாகியுள்ள ஜி ஜின்பிங், தமது குழுவில் முக்கிய ஆறு நபர்களை தெரிவு செய்து அறிவித்துள்ளார்.
சீனாவின் எதிர்காலத்தை இந்த 7 பேர்கள் கொண்ட குழுவே இனி முடிவு செய்வதுடன், முன்னெடுத்து செல்லவும் உள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம் திகதி தொடங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு முடிவுக்கு வந்துள்ளது.
@getty
கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்துகொண்டுள்ள இந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், முறைப்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகவும் அறிவிக்கப்பட்டார்.
மட்டுமின்றி, சீன ராணுவ மத்திய குழுவிற்கும் தலைவராக ஜி ஜின்பிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 69 வயதாகும் ஜி ஜின்பிங், சீன ஜனாதிபதியாக 3வது முறை தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் நியமனத்திற்கான அறிவிப்பு முறைப்படி வரும் மார்ச் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சீனாவை யார் வழி நடத்துவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங் தலைமையில் 6 பேர்கள் கொண்ட உயர்மட்ட அமைப்பு இனி சீனாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
@getty
இதில், ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவரும் ஷாங்காய் கட்சித் தலைவருமான 63 வயது லி கியாங் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் வரும் மார்ச் மாதம் சீனப் பிரதமராக முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் சீனாவின் ஊழலுக்கு எதிராக கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் Zhao Leji தெரிவாகியுள்ளார். 67 வயதாகும் Wang Huning நான்காவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
1991ல் இவர் எழுதி வெளியிட்ட America Against America என்ற புத்தகமானது கடந்த ஜனவரி 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரத்திற்கு பின்னர் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Source: Bloomberg
ஐந்தாவது இடத்தில் 66 வயதாகும் Cai Qi தெரிவாகியுள்ளார். கொரோனா நெருக்கடியில் நாடு சிக்கியிருந்த காலகட்டத்தில், சீனாவின் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னெடுத்து, தங்கப்பதக்கங்களை குவித்ததுடன், கொரோனா தொடர்பாக சீனாவுக்கு எதிரான உலக நாடுகளின் பார்வையை மாற்றினார்.
ஆறாவது இடத்தில் Ding Xuexiang தெரிவாகியுள்ளதுடன், நிர்வாக துணை ஜனாதிபதியாக செயல்படுவார் என கூறப்படுகிறது.
7வது இடத்தில் 66 வயதாகும் Li Xi தெரிவாகியுள்ளார். இந்த 7 பேர்களும் இனி சீனாவின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என கூறப்படுகிறது.