அவர்களுக்கு அது வழக்கம்தானே... இங்கிலாந்தில் இந்திய இளைஞரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவகாரம் குறித்து இந்திய அரசியல்வாதி
இந்திய அரசியல்வாதியும், ஐ.நா துணைப்பொதுச்செயலராக பணியாற்றியவருமான சஷி தரூரிடம், இங்கிலாந்தில் இந்திய இளைஞரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறிய பதில் வைரலாகிவருகிறது.
கிழித்து தொங்கவிடும் அரசியல்வாதி
சஷி தரூர் பொதுவாகவே பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின்போது அவர்கள் இந்தியாவில் செய்த அராஜகச் செயல்களை கிழித்துத் தொங்கவிடுபவர்.
They’re learning from the British Museum! https://t.co/6uAIFgww4r
— Shashi Tharoor (@ShashiTharoor) September 4, 2025
பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை என ஒரு சொல் வழக்கு உண்டு. ஒருமுறை அதை கேலி செய்த ரிஷி தரூர், ஆம், இருட்டில் பிரித்தானியர்கள் என்ன செய்வார்களோ என கடவுளுக்கே நம்பிக்கையில்லை, அதனால்தான் பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை என்று கூறிய விடயம் வைரலானது.
2015ஆம் ஆண்டு, அவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட்டு யூனியன் என்னும் அமைப்பில், பிரித்தானியர்கள் மத்தியிலேயே இதைக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இந்திய இளைஞரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவகாரம் குறித்து சஷி தரூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சஷி தரூர், அந்த திருடர்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திடமிருந்து திருடக் கற்றுக்கொள்கிறார்கள் என்று கேலியாகக் கூறியுள்ளார்.
அதாவது, இந்தியாவுக்குச் சொந்தமான பல பொருட்களை பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுபோய் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதைக் குத்திக் காட்டும் வகையில் அப்படி கூறியுள்ளார் சஷி தரூர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |