மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்... தேடப்படும் குற்றவாளியை உக்ரைனில் தளபதியாக அறிவித்த புடின்
BUK ஏவுகணையை ஏவி மலேசிய விமானம் MH17-ஐ வீழ்த்தியதாக இகோர் ஸ்ட்ரெல்கோவ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
உக்ரைனில் போரிட்டுவரும் ரஷ்ய முன்கள துருப்புகளுக்கான தளபதியாக இகோர் ஸ்ட்ரெல்கோவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய பயணிகள் விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்திய, மேற்கத்திய நாடுகளால் தேடப்படும் குற்றவாளியை உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு தளபதியாக நியமித்துள்ளார் விளாடிமிர் புடின்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்டவர் 51 வயதாகும் Igor Strelkov. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்யா மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் இந்த இகோர் ஸ்ட்ரெல்கோவ்.
@east2west
ஆனால், அதிசயமாக உக்ரைனில் போரிட்டுவரும் ரஷ்ய முன்கள துருப்புகளுக்கான தளபதியாக இகோர் ஸ்ட்ரெல்கோவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ல் BUK ஏவுகணையை ஏவி மலேசிய விமானம் MH17-ஐ வீழ்த்தியதாக இகோர் ஸ்ட்ரெல்கோவ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
288 பொதுமக்களுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா புறப்பட்டு சென்ற அந்த விமானமானது BUK ஏவுகணை தாக்கியதால் நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த நிலையில், இகோர் உட்பட மூன்று ரஷ்யர்கள் மற்றும் ஒரு உக்ரேனிய நாட்டவர் என நால்வரை நெதர்லாந்தில் வைத்து கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
@east2west
தற்போதும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கானது நெதர்லாந்து நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இகோர் ஸ்ட்ரெல்கோவ் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் களமிறங்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னர் தான் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
மட்டுமின்றி, உக்ரைனில் வாங்கும் ஒவ்வொரு அடியும் ரஷ்யாவில் ஜனாதிபதி புடினின் பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என எச்சரித்திருந்தார். மேலும், உக்ரைன் போரில் ரஷ்யா பின்னடைவை சந்திக்க விளாடிமிர் புடின் மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ஆகிய இருவருமே பொறுப்பு எனவும் சாடினார்.
@getty
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நாட்களில் கொடூரத்தின் உச்சமாக செயல்பட்டவர் இகோர் ஸ்ட்ரெல்கோவ். தற்போது உக்ரைனுக்கு இகோர் ஸ்ட்ரெல்கோவ் அனுப்பப்படுவது, புடினை ஆதரிக்கும் தனியார் படை ஒன்றின் தளபதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
@getty