கார் பந்தயத்தில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: 10 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூடு
மெக்சிகோ நாட்டில் பாஜா கலிபோர்னியா என்ற மாகாணத்தில் உள்ள என்செண்டா நகரில் பிரம்மாண்டமான கார் பந்தயம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.
இந்த கார் பந்தயம் சென் வென்சிட்டி என்ற பகுதியில் தொடங்க இருந்த நிலையில், இதில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் இந்த பகுதியில் கூடி தயாராகி கொண்டு இருந்தனர்.
At least 10 people were killed and nine injured in shootout at car show in northern Mexico's Baja California, municipal government reports pic.twitter.com/QxywnX65mz
— TRT World Now (@TRTWorldNow) May 21, 2023
மேலும் இந்த கார் பந்தைய போட்டியை காண நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த பகுதிக்கு கூடியிருந்த நிலையில், வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென கார் பந்தைய வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
10 பேர் வரை உயிரிழப்பு
மர்ம கும்பல் நடத்திய இந்த திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்.
AP
அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயங்களுடன் இருந்த 9 பேரை மீட்பு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் விசாரணை தீவிரப்படுத்திய பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
AP