குறுகிய தூர விமான சேவைகளுக்கு பிரான்ஸ் தடை: ரயில் பயணத்தை ஊக்குவிக்க திட்டம்
குறைந்த தூர பயண வழித்தடங்களில் பறக்கும் உள்ளூர் விமான சேவையை பிரான்ஸ் செவ்வாய்க்கிழமையுடன் முற்றிலுமாக தடை செய்துள்ளது.
உள்ளூர் விமான சேவைகள் நிறுத்தம்
இரண்டரை மணி நேரங்களில் ரயில் பயணங்கள் மூலம் அடையக்கூடிய இடங்களுக்கான குறுகிய வழித்தட உள்ளூர் விமான சேவையை செவ்வாய்க்கிழமை முதல் முற்றிலுமாக தடை செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இவை விமான நிறுவனங்களின் தேவையற்ற உமிழ்வை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Joel Saget, AFP
இந்த நடவடிக்கை 2021 பருவநிலை விதிகளில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தாலும், சில விமான நிறுவனங்கள் இவற்றை சட்டபூர்வமானதா என்று ஆராய ஐரோப்பிய ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இணைப்பு விமானங்களுக்கு விதிவிலக்கு
இந்த புதிய கட்டுப்பாட்டு நடைமுறையின் கீழ் பாரிஸ் மற்றும் அதன் பிராந்திய மையங்களுக்கான, அதாவது நான்டெஸ், லியோன் மற்றும் போர்டியாக்ஸ் ஆகியவற்றிற்கான விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது, ஆனால் இந்த புதிய நடைமுறை இணைப்பு விமானங்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
EPA/ GETTY IMAGES
அதே நேரத்தில் விமான சேவை ரத்து செய்யப்படும் வழித்தட பாதையில் சீரான மற்றும் சரியான நேரங்களில் ரயில் போக்குவரத்து சேவைகள் இருப்பதையும், விமான பயணிகளின் சரியான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கும் மற்றும் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கணக்கில் கொள்ளும் அளவிற்கும் ரயில் சேவைகள் போதுமானதாக இருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் ஒரே நாளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் நிலையத்திற்கு திரும்பி வரக்கூடிய அளவிற்கு சம்பந்தப்பட்ட ரயில் வழித்தட பாதை இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BBC