கார் விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர்: யார் இந்த தீப் சித்து?
பஞ்சாபில் தீப் சித்து என்ற பிரபல நடிகர் மற்றும் சமூகசெயல்பாட்டாளர் குண்டலி மனேசர் பளுவால் விரைவுச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பஞ்சாப் விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டத்திற்கு முக்கிய தூண்டுகோலாக இருந்ததாக கூறி பிப்ரவரி 9 திகதி தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் முக்ஸ்டார் என்ற பகுதியில் பிறந்த தீப் சித்து, முதலில் வக்கீலாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
பின்னர் கிங்பிஷரின் ஆணழகன் போட்டியில் விருதை பெற்ற பின், பஞ்சாப் சினிமா துறையில் கால்பதித்து, 2015 ஆம் ஆண்டு அவர் நடித்த ரம்டா ஜோகி என்ற திரைப்படத்தின் மூலம் பஞ்சாப் திரையுலகின் முக்கிய நடிகரானார்.
சன்னி தியோலால் அரசியலில் ஆர்வம் பெற்ற சித்து, பின்னர் தனியாக பஞ்சாப் வாரிஸ் தி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து, மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு பஞ்சாப் விவசாயிகள் நடந்த குடியரசு நாள் போராட்டத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று டெல்லி நோக்கி செல்லும், குண்டலி மனேசர் பளுவால் விரைவுச்சாலையில், நின்று கொண்டிருந்த லொரி மீது தீப் சித்து கார் மோதியதில் சித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தீப் சித்து கார் விபத்தில் உயிரிழந்ததற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பஞ்சாப் அரசியல் தலைவர்கள் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Visuals of the car from the accident site. Punjabi actor Deep Sidhu died in a road accident after he rammed his car into a standing truck near Pipli toll at Kundli-Manesar-Palwal (KMP) Expressway, as per Haryana Police pic.twitter.com/WL2MzT1hYd
— ANI (@ANI) February 15, 2022