சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு நடுகடலில் மாயம்! ஜப்பானில் பரபரப்பு
ஜப்பானில் 26 பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு நடுகடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kazu 1 என்ற சுற்றுலா படகே கடலில் மாயமாகியுள்ளது. சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு Utoro துறைமுகத்திலிருந்து படகு புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதியம் 1.15 மணிக்கு படகிலிருந்து உதவி கேட்டு ஜப்பான் கடலோர காவல்படைக்கு அழைப்பு வந்துள்ளது.
படகின் பின்புறத்தில் தண்ணீர் நுழைந்துள்ளதாகவும், அது மூழ்கத் தொடங்கியுள்ளதாக குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நடுவானில் தாக்கிய உக்ரைன் ஏவுகணை.. அந்தரத்தில் சிதறிய ரஷ்ய ஹெலிகாப்டர்! வீடியோ ஆதாரம்
மேலும், படகில் இருந்தவர்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருப்பதாக குழுவினர் ஜப்பான் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, Kazu 1 குழுவினருடான தொடர்பை அதிகாரிகள் இழந்துள்ளனர். குறித்த படகில் 2 குழந்தைகள் மற்றும் 2 குழுவினர் உட்பட மொத்தம் 26 பயணித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
படகு வடக்கு ஹொக்கைடோ தீவில் மூழ்கியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், சம்பவயிடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.