சீக்கிய மாணவர்கள் கிர்பான் குறுவாளை வைத்துக் கொள்ள அனுமதி! அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் கீர்பான் குறுவாளை வைத்துக் கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடையை குயின்ஸ்லேண்ட் மாகாண நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தடையை நீக்கிய நிதிமன்றம்
சீக்கியர்கள் கிர்பான்(kirpan) குறுவாள் போன்ற தங்கள் ஐந்து மத அடையாளங்களை எப்போதும் தங்களுடன் வைத்து இருக்க வேண்டும் என கூறும் நிலையில், சீக்கியர்களின் இந்த வழக்கத்துக்கு அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் சீக்கியர்கள் தங்களது மத நம்பிக்கையின் அடையாளமாக எப்போதும் வைத்து இருக்க வேண்டிய கீர்பான் குறுவாளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து கடந்த ஆண்டு கமல்ஜித் கவுர் அத்வால் என்ற நபர் குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவுஸ்திரேலியாவின் இனப் பாகுபாடு சட்டத்தின் கீழ் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை அரசியலமைப்பு நடவடிக்கைக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை கீழ்மட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்த நிலையில், சீக்கியர்கள் மேல்முறையீட்டில் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து சீக்கிய மாணவர்கள் கீர்பான் குறுவாளை வைத்துக் கொள்வதை குறித்து பரிசீலிப்பதாக குயின்ஸ்லேண்ட் மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |