The Simpsons கணிப்பு: ஆகஸ்ட் 2025-ல் டொனால்ட டிரம்ப் மரணம்? பரபரப்பை கிளப்பும் வீடியோ!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2025 ஆகஸ்டில் உயிரிழந்து விடுவார் என பிரபலமான தி சிம்ப்சன்ஸ்' தொடர் கணித்துள்ளது.
டிரம்ப் மரணம் குறித்த கணிப்பு
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று, 'தி சிம்ப்சன்ஸ்’(The Simpsons) அனிமேஷன் தொடர் ஆகஸ்ட் 2025-ல் அமெரிக்க ஜனாதிபதியின் மரணத்தை கணித்ததாகக் கூறுகிறது.
பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பானதாகவும், பின்னர் அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில், பொன்னிற முடி கொண்ட ஒரு கதாபாத்திரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போலவே தோற்றமளிக்கிறது. "கடுமையான நெஞ்சுவலி காரணமாக ஜனாதிபதி ஆகஸ்ட் 2025-ல் இறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஒரு குரல் அதில் ஒலிக்கிறது.
பின்னர், அந்தக் கதாபாத்திரம் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு, நேரடி ஒளிபரப்பின்போது சரிந்து விழுவதைக் காட்டுகிறது. அப்போது, மருத்துவ ஊழியர் ஒருவரின் குரல், "இது வெறும் மன அழுத்தம் அல்ல, இது ஒரு அறிகுறி" என்று கூறுவது கேட்கிறது.
இந்த வீடியோவின் வர்ணனையாளர், இதை நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே "மிகவும் disturbing" கணிப்புகளில் ஒன்று என்று அழைக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், 'தி சிம்ப்சன்ஸ்' தொடர் பல கணிப்புகளுடன் நீண்ட காலமாகவே தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றில் பல தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |