300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் உதவி
300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியது.
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் அரசு படகில் இருந்தவர்களை மீட்டது.
300 அகதிகளுடன் மூழ்கிய படகை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பதிலளித்து, படகில் இருந்தவர்களை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, இலங்கையில் இருந்து 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த படகு ஒன்று, பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்கி கடலில் முழ்கிவருவதாக தகவல் வெளியானது.
இலங்கை கடற்படைப் செய்தி தொடர்பாளர் இந்திக்க டி சில்வா (Indika de Silva), படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தங்கள் கொடுத்ததாக கூறினார்.
பின்னர், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.
கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே கடற்படைக்கு அதிகாரபூர்வமாக தெரியும் என்றும், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என்றும் டி சில்வா கூறினார்.
நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படகுகளில் எந்த பாதுகாப்பும் இன்றி கடலில் பயணிக்கின்றனர்.