சிங்கப்பூர் டூர் போறீங்களா? இங்கெல்லாம் மறக்காம போய்ட்டு வந்துருங்க
பொதுவாக அநேகமானவர்கள் சென்று பார்க்க வேண்டும் என நினைக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் சிங்கப்பூரில் அப்படி என்ன இருக்கின்றது என பலரும் நினைக்கலாம்.
மற்ற நாடுகளில் சொந்தமாக கார் வைத்துக் கொண்டு பயணிக்க தான் விரும்புவார்கள்.
ஆனால் இந்த நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக பயணிக்க பஸ், ரயில் ஆகிய வாகனங்களை தான் அதிகம் நாடுவார்களாம்.
அந்த வகையில் சிங்கப்பூரில் இருக்கும் பிரசித்து பெற்ற இடங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
சிங்கப்பூரில் ஸ்பெஷலான இடங்கள்
1. Marina Bay Sands
சிங்கப்பூரில் முதலில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று தான் Marina bay sands.இந்த இடத்தில் சொகுசு ஹோட்டல் மற்றும் கலை மற்றும் அறிவியல் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.
உயரத்தில் நின்று பார்வையிடுவதன் மூலம் அங்கு காபி மற்றும் சிற்றுண்டிகளை தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தான் இந்த இடத்தின் ஸ்பெஷல் என்றும் கூறலாம்.
2. Little India and Arab Street
சிங்கப்பூர் என்றால் Little India and Arab Street தான். இந்த இடத்தை பார்க்கும் போது கண்ணிற்கு குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.
மேலும் Little India and Arab Street இடத்தில் சமைப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக விரைகிறார்கள்.
3. Universal Studios
இந்த நாட்டில் மிகவும் உற்சாகவும் சிலிரப்பாகவும் இருக்கும் இடம் தான் யுனிவர்சல் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ சென்டோசா தீவில் அமைந்துள்ளது.
குடும்பத்துடன் செல்லும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா இடமாகும். பொழுது போக்கிற்கு பெயர் போன இடமும் இது தான்.
4. Marine Fisheries
சிங்கப்பூரில் Marine Fisheries இந்த இடம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும். இங்கு மீன்வளத்தில் 1,00,000 க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் உள்ளன. உலகத்தை அருகில் பார்க்க வேண்டும் என்றால் இங்கு செல்லுங்கள்.
5.Gardens by the Bay
இயற்கை அழகையும் மனிதர்களின் கற்பனை திறனையும் இங்கு பார்க்கலாம். தாவரங்களை வைத்து அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். மேலும் இதன் உட்புறம் நீர் வீழ்ச்சி கொண்டிருக்கும்.
6.Botanic Garden
போட்டோ ஷீட் எடுக்க வேண்டும் என்றால் இங்கு செல்லலாம். இந்த இடம் பூங்காக்கள் வளைகுடாவில் உள்ள தோட்டங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. அங்குள்ளவர்கள் மரங்களை வைத்து இப்படியும் செய்யலாமா? என்பதற்கு எடுத்து காட்டாக பார்க்கிறார்கள்.
7. Singapore Flyer
பொதுவாக சுற்றலா மற்றும் ஹனிமூன் செல்லும் போது சிங்கப்பூருக்கு செல்லலாம். மெரினா பே சாண்ட்ஸின் காட்சி சுற்றுலா பயணிகளுக்கு திருப்திப்படுத்தவில்லையென்றால் இந்த இடத்திற்கு செல்லலாம். Singapore Flyer உலகின் மிகப்பெரிய ராட்சத கண்காணிப்பு சக்கரம்.
8. Sentosa Island
விளையாட வேண்டும் என்று நினைத்தால் இங்கு செல்லலாம். கடற்கரையில் கைப்பந்து விளையாட இலவச மைதானங்கள் மற்றும் கயாக்கிங் மற்றும் ஸ்கிம்போர்டிங் போன்ற நீர் நடவடிக்கைகள் உள்ளன. மேலும் சிங்கப்பூர் சென்றால் கண்டிப்பாக இதை மறக்காமல் பாருங்கள்.