சிங்கப்பூர் விசாவின் வகைகள் மற்றும் அதனை எப்படி பெறுவது? முழுமையான தகவல்கள்
சிங்கப்பூர் விசாவை எப்படி விண்ணப்பிப்பது குறித்தும், அதன் வகைகள் குறித்தும் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
சிங்கப்பூர் விசா (Singapore Visa) சிங்கப்பூர் தீவு நகரம் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். இயற்கை மற்றும் அழகான வனவிலங்குகளில் இருந்து மாயாஜால சுற்றுலா தலங்கள், வரம்பற்ற ஷாப்பிங், சுவையான உணவுகள் என்று சிங்கப்பூரில் பார்க்க கூடிய விடயங்கள் ஏராளம் உள்ளது. இது மற்ற ஆசிய நாடுகளை விட முற்றிலும் வேறுபட்டது.
மேலும், சிங்கப்பூரானது சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், வளர்ச்சியடையாத மற்றும் உயர்மட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு இடமாகவும் உள்ளது.
நன்கு படித்த உயர் வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல் எளிமையான ஊதியம் பெறும் வேலை தேடும் மக்களுக்கும் சிறந்த இடமாக உள்ளது.
சிங்கப்பூர் அரசானது அனைத்து வேலை விசாக்களுக்கான தகுதியை மிகவும் சிக்கலாக மாற்றிய பிறகும், பல வெளிநாட்டினரை இந்த நாட்டில் வேலை செய்யத் தூண்டியுள்ளது.
சிங்கப்பூர் விசா விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. சிங்கப்பூரில் தங்க விரும்பும் வெளிநாட்டினர், வேலைவாய்ப்பு, வணிக சந்திப்புகள், சுற்றுலா நோக்கங்களுக்காக சிங்கப்பூர் வருபவர்களுக்கு சில வகையான வெவ்வேறு விசாக்கள் உள்ளன.
ஒவ்வொரு சிங்கப்பூர் விசாவிற்கும் வெவ்வேறு தேவைகள், நன்மைகள் மற்றும் வரம்புகள் உள்ளன.
இந்தியாவுக்கு மிக அருகில் சிங்கப்பூர் இருப்பதால் இந்தியர்கள் அங்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் சிங்கப்பூருக்கு பயணிக்க விரும்பும் இந்திய குடிமக்கள் செல்லுபடியாகும் விசா (Visa) பெற வேண்டும்.
சிங்கப்பூர் விசா வகைகள் (Singapore Visa Types)
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் நோக்கத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையான விசாக்கள் உள்ளன.
பயணிகள் விசா (Tourist Visa)
நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலாவுக்காக செல்ல விரும்பினால் இந்த வகையான விசா தேவை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக இந்த விசாவை பெறலாம்.
அந்த நாட்டின் அற்புதங்கள், கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த விசாவை பெறலாம். இந்த விசாவானது, குறுகிய காலத்திற்கு செல்லும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.
வணிக விசா (Business Visa)
உங்களுடைய வேலை அல்லது வணிக நோக்கங்களுக்காக சிங்கப்பூர் செல்வதாக இருந்தால் சுற்றுலா விசா பொருந்தாது. உங்களுக்கு அப்போது வணிக விசா தேவைப்படும்.
மாணவர் விசா (Student Visa)
சிங்கப்பூரில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த விசா கொடுக்கப்படும். அதாவது உங்களது கல்வியைத் தொடர சிங்கப்பூர் செல்ல விரும்பினால், இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விசா மூலம் சிங்கப்பூரில் தங்கி சில வேலை அனுபவத்தைப் பெறலாம். இதற்கு, நீங்கள் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரம் தேவை.
போக்குவரத்து விசா (Transit Visa)
நீங்கள் சிங்கப்பூர் வழியாக வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், உங்களுக்கு போக்குவரத்து விசா தேவைப்படலாம். மேலும் உங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன் 96 மணிநேரம் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும்.
வெளிநாட்டு தொழில்முனைவோர்/இடமாற்றம் செய்யப்பட்ட நிர்வாக ஊழியர்களுக்கு (Foreign Entrepreneur/Relocated Management Staff)
1. Employment Pass
வேலைவாய்ப்பு பாஸ் (EP) என்பது வெளிநாட்டு தொழில்முறை ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களின் உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூர் பணி விசாவின் முக்கிய வகையாகும்.
நிர்வாக அல்லது சிறப்பு வேலைகளில் உள்ள வெளிநாட்டு நிபுணர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும்.
2. Personalized Employment Pass (PEP)
தனிப்பயனாக்கப்பட்ட வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டு (PEP) என்பது, தற்போதுள்ள சில குறிப்பிட்ட Employment Pass வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுக்கானது.
இது சிங்கப்பூரில் உள்ள Employment Pass போலல்லாமல், பாஸ் வைத்திருப்பவர் முதலாளியை விட்டு வெளியேறும் போது ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் இது, விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
3. Entrepreneur Pass (Entre-pass)
இந்த Entrepreneur Pass ஆனது வெளிநாட்டு தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு (For Relocated Staff’s Family Members)
1. Dependent Pass
Dependent Pass என்பது எம்ப்ளாய்மென்ட் பாஸ் (Employment Pass) மற்றும் தொழில்முனைவோர் பாஸ் வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான விசா ஆகும்.
அதாவது, $4,000க்கு மேல் நிலையான மாதச் சம்பளம் உள்ள எம்ப்ளாய்மென்ட் பாஸ் மற்றும் எஸ் பாஸ் (S Pass) வைத்திருப்பவர்களின் மனைவி, திருமணமாகாத அல்லது 21 வயதுக்குட்பட்ட சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான சார்புடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
2. Long Term Visit Pass
எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருப்பவர்கள் (P1, P2) தங்களுடைய 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகள்கள், பெற்றோர், மாமியார் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட ஊனமுற்ற குழந்தைகளுக்கான இந்த பாஸை விண்ணப்பிக்கலாம்.
3. S Pass
S Pass ஆனது குறைந்தபட்சம் $2,200 நிலையான மாத சம்பளம் பெறும் நடுத்தர அளவிலான திறமையான வெளிநாட்டினரை சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதிக்கிறது.
வேலை வழங்குபவர்கள் ஒரு வேலை வேட்பாளர் சார்பாக எஸ் பாஸ் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும். இது, சம்பளம், கல்வித் தகுதி, திறன்கள், வேலை வகை மற்றும் பணி அனுபவம் உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.
சிங்கப்பூர் நிரந்தர குடிமக்களாக மாறுதல் (Becoming Singapore Permanent Residence/Citizens)
1. Singapore Permanent Resident
சிங்கப்பூருக்கு இடம்பெயர விரும்பும் வெளிநாட்டவர்கள், சிங்கப்பூரின் நிரந்தரக் குடியுரிமை பெற வேண்டுமானால் குடிபெயர்வதற்கு முன் தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
2. GIP (Global Investor Program)
சிங்கப்பூரில் தொழில் தொடங்க அல்லது முதலீடு செய்ய ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்காக உலகளாவிய முதலீட்டாளர் திட்டம் (ஜிஐபி) தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிங்கப்பூர் நிரந்தரக் குடியுரிமை (PR) நிலைக்குத் தகுதியுடையவர்கள்.
விசா பெறுவது எப்படி?
சிங்கப்பூர் விசா பெறுவதற்கு அதிகாரப்பூர்வ mediators மூலம் ஓன்லைனில் விண்ணப்பிக்கலாம். Immigration and Checkpoints Authority என்ற வலைத்தளம் மூலமாக விசா விண்ணப்பிக்க முடியும்.
நீங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாகவும் ஒன்றுக்கொன்று முரணாக இல்லாமலும் இருந்தால் சிங்கப்பூர் விசா விண்ணப்பத்திற்கான செயலாக்க நேரம் 3 முதல் 5 வேலை நாட்களில் முடிந்து விடும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
1. செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (Passport) (குறைந்தபட்சம் 6 மாத காலம் செல்லுபடியாக இருக்க வேண்டும்).
2. புதிய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
3. சிங்கப்பூரில் தங்க இடம் (Hotel Reservation) மற்றும் பயண திட்டம் (Travel Itinerary).
4. போக்குவரத்து டிக்கெட் (Flight Tickets) சான்றுகள்.
முக்கியமாக நாம், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் கொடுக்கப்படாமல் கவனமாக பார்க்க வேண்டும். சில விசா mediators -களின் சேவைகளை பயன்படுத்தி செயல்முறையை எளிதாக்கலாம். விசா அனுமதி கிடைத்தவுடன் அதை அச்சிட்டு கொண்டுசெல்ல வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |