இஸ்ரேலில் குழந்தைகள் கண்முன்னே சகோதரி, மைத்துனர் மரணம்: நடிகை கண்ணீர் மல்க வீடியோ
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் குழந்தைகள் கண்முன்னே சகோதரி, மைத்துனர் மரணமடைந்த சம்பவம் குறித்து தொலைகாட்சி நடிகை மதுரா நாய்க் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மோதல்
பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகிக்கின்றன.
இந்நிலையில், கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த உச்சகட்டமாக போரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600 -யைக் கடந்தது.
மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள குடும்பங்களின் வீட்டிற்குள் சென்று, பிணைக்கைதியாக பிடிக்கும் முன்பு, குடும்ப உறுப்பினர்களின் கண்முன்னே கொலை செய்து வருகின்றனர்.
நடிகை வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவில், "நான் மதுரா நாயக், இந்திய வாழ் யூதர். நாங்கள் மொத்தம் இந்தியாவில் 3,000 பேர் உள்ளோம். அக்டோபர் 7 -ம் திகதி எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், குழந்தைகளின் கண்முன்னே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எங்களுடைய துக்கம் மற்றும் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் வலியில் உள்ளது. அவர்கள், எங்களது குழந்தைகள், பெண்களளை இலக்காக வைத்து தாக்கி வருகின்றனர்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |