நெருங்கும் தேர்தல்... ஜேர்மனியில் ஒரே கட்சியில் 7 வேட்பாளர்கள் உட்பட 16 பேர்கள் மரணம்
ஜேர்மன் மாகாணம் ஒன்றில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தொடர்ச்சியாக வேட்பாளர்கள் மரணமடையும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேசு பொருளாக
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலேயே உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுவரை 16 வேட்பாளர்கள் திடீரென்று மரணமடைந்துள்ளனர்.
இதில் 7 வேட்பாளர்கள் AfD கட்சியை சேர்ந்தவர்கள். எஞ்சிய வேட்பாளர்கள் SPD, SDA, FDP, கிரீன்ஸ், விலங்கு நலக் கட்சி, UWG, Free Voters, வாக்கெடுப்பு கட்சி மற்றும் வாக்காளர் குழு உள்ளிட்ட கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என மரணமடைந்துள்ளனர்.
ஆனால், தற்போது பொதுமக்களிடையே அதிக செல்வாக்கைப் பெற்றுவரும் AfD கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 7 பேர்கள் திடீரென்று மரணமடைந்துள்ளது பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
மேலும் கட்சியின் வேட்பாளர்கள் 7 பேர்கள் திடீரென்று மரணமடைந்துள்ளது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே அக்கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவரான Alice Weidel சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சட்டம் அனுமதிக்கிறது
AfD கட்சி வேட்பாளர்களின் முதல் நான்கு மரணங்களில் இயற்கைக்கு மாறான அல்லது குற்றச் செயல்கள் எதுவும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களின் திடீர் மரணங்கள் தற்போது தேர்தல் பணிகளில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர்கள் காலமானால் இடைத்தேர்தல்கள் நடத்த சட்டம் அனுமதிக்கிறது. மொத்தம் 18 மில்லியன் மக்கள்தொகை கொண்ட North Rhine-Westphalia மாகாணத்தில் 20,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
கடந்த மாகாணத் தேர்தலில் AfD கட்சியானது வெறும் 5.4 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த ஃபெடரல் தேர்தலில் AfD கட்சி 16.8 சதவீத வாக்குகளை வாங்கி வியக்க வைத்தது. அதேப் போன்ற ஒரு வெற்றியை இந்த ஆண்டும் பலர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |