புடினுடைய அழைப்புக்காக காத்திருக்கும் இரண்டு நாடுகளின் வீரர்கள்: பதிலடி கொடுத்துள்ள உக்ரைன் அமைச்சர்
ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, சீனா மற்றும் வட கொரியா நாடுகளிலுள்ள தன்னார்வலர்களான வீரர்கள் புடினுடைய அழைப்புக்காக காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புடின் ஆதரவாளர் தெரிவித்துள்ள தகவல்
புடினுடைய ஆதரவாளரான Vladimir Solovyov, புடினுடைய கட்டளைக்காக படைகள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் வட கொரியாவிலிருந்து தன்னார்வலர்களைக் காண தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
Image: Getty Images
கேலி செய்யும் உக்ரைன்
ஆனால், அவரது கருத்தை கேலி செய்துள்ள உக்ரைன் உள்துறை அமைச்சரான Anton Gersshchenko, ரஷ்யாவுக்காக போரிட, சீனா மற்றும் வட கொரியாவிலிருந்து தன்னார்வலர்களைக் காண தான் காத்திருப்பதாக Solovyev தெரிவித்துள்ளார்.
அது சரி, உலகின் இரண்டாவது இராணுவத்திற்கு என்ன ஆயிற்று என கேலியாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் Anton.
Image: KCNA VIA KNS/AFP via Getty Image
Solovyev looks forward to seeing volunteers from China and North Korea fighting for Russia.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 7, 2023
What happened to the "second army in the world"? pic.twitter.com/PD1VkUKlps