முடிசூட்டப்பட்டார் தென்னாப்பிரிக்காவின் புதிய ஜூலு மன்னர்: டர்பனில் கலைகட்டிய விழா
49 வயதான மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி தென்னாப்பிரிக்காவின் புதிய ஜூலு மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1994ல் ஜனநாயக நாடாக மாறிய பிறகு நடக்கும் முதல் ஜூலு முடிசூட்டு விழா இதுவாகும்.
தென்னாப்பிரிக்காவில் ஜூலு மன்னரின் வரலாற்று சிறப்புமிக்க முடிசூட்டு விழா கடலோர நகரமான டர்பனில் கோலாகலமாக இன்று நடைபெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 1994ல் ஜனநாயக நாடாக மாறிய பிறகு நடக்கும் முதல் ஜூலு முடிசூட்டு விழா கடலோர நகரமான டர்பனில் உள்ள பிரம்மாண்டமான கால்பந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் 49 வயதான மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜனாதிபதி சிரில் ராமபோசாவினால் முறைப்படி மன்னராக அங்கீகரிக்கப்பட்டார், மேலும் கறுப்பின ஜனாதிபதி ஒருவர் ஜூலு முடிசூட்டு விழாவில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.
WATCH: King Misuzulu KaZwelithini has now fully and officially ascended to the Zulu throne. Here he is taking the oath of office administered by KwaZulu-Natal deputy judge president, Isaac Madondo.
— IOL Lifestyle (@IOL_Lifestyle) October 29, 2022
Video:@ANAPICTURESAFRICA@IOL #coronation #kingmisuzulu #KingMisuzuluCoronation pic.twitter.com/TSJ9ItSSjV
அத்துடன் 1994ல் நாடு ஜனநாயக நாடாக மாறிய பிறகு நடக்கும் முதல் ஜூலு முடிசூட்டு விழா இதுவாகும், இது அரியணையில் ஏறுவது தொடர்பான கடுமையான குடும்ப சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரியவந்துள்ளது.
மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி இந்த முடிசூட்டு விழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசஸ் மபிதா ஸ்டேடியத்தில் கலந்து கொண்டனர், முடிசூட்டு நிகழ்ச்சியில் பாரம்பரிய கொண்டாட்ட பாடல்கள், நடனங்கள் மற்றும் சடங்குகள் நடைபெற்றது.
#UyamemezaOkandaba #UyinkosiYohlanga #ZuluKingCoronation Thousands of people have gathered at Moses Mabhida stadium to witness the handing over of the accreditation certificate to King Misuzulu ka Zwelithini. pic.twitter.com/hcy8Yv54E5
— Nomsa Maseko (@nomsa_maseko) October 29, 2022
கூடுதல் செய்திகளுக்கு: ட்விட்டரை எதற்காக வாங்கினேன்? எலான் மஸ்க் அளித்த மிரள வைக்கும் விளக்கம்
தென்னாப்பிரிக்காவில் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எட்டு மன்னர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
AFP