ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்! முடிவு செய்த பிரபல நாடு: ஆனால் கடைசியில் நடந்த டுவிஸ்ட்
தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு அந்நாட்டில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உலகில் இருக்கும் நாடுகளில், மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது.
ஏனெனில், இந்த நாட்டில் ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.
இதனால், இது போன்று திருமண விவகாரத்தில், பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அங்கு நீண்டநாட்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிப்பதை போல, ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும் என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன் படி இந்த சட்டம் குறித்து, பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்டம் குறித்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது, அதற்கு இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும். பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.
ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது என பலரும் கருத்து கூறிவருவதால், இதை சட்டத்தை நிறைவேற்றுதோ? இல்லையா? என்ற சந்தேகத்தில் அரசு இருக்கிறது.