நீண்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் பணயக்கைதி ஒருவரை விடுவித்த அல் கொய்தா
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு ஒன்று லிபியாவில் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்க நாட்டவர் ஒருவரை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிடப்படாத குழு ஒன்றால்
தென்னாப்பிரிக்க நாட்டவரான Gerco van Deventer என்பவர் அவசர மருத்துவ உதவிக் குழுவில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் Gift of the Givers என்ற தொண்டு நிறுவனம் தொடர்புடைய தகவலை உறுதி செய்துள்ளது.
@afp
2017ல் லிபியாவில் வைத்து பெயர் குறிப்பிடப்படாத குழு ஒன்றால் Gerco van Deventer கடத்தப்பட்டார். ஓராண்டுக்கு பின்னர் மாலியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அவர் விற்கப்பட்டார்.
தற்போது 48 வயதாகும் van Deventer விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை மாலி பாதுகாப்பு அமைப்பும் உறுதி செய்துள்ளது. மேலும், அந்த நபர் மாலி மற்றும் அல்ஜீரியா எல்லையில் விடுவிக்கப்பட்டார் என்றே கூறப்படுகிறது.
துருக்கி நாட்டவர்கள் மூவர்
மேலும், மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தென்னாப்பிரிக்க தொண்டு நிறுவனமான Gift of the Givers தெரிவித்துள்ளது.
@facebook
கடந்த 2017ல் van Deventer உடன் கடத்தப்பட்ட துருக்கி நாட்டவர்கள் மூவர், 7 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2018ல் van Deventer-ஐ விடுவிக்க அந்த தீவிரவாத இயக்கம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரியிருந்ததாகவும்,
ஆனால் Gift of the Givers தொண்டு நிறுவனம் பேரம் பேசி அதை 500,000 அமெரிக்க டொலருக்கு கொண்டு வந்ததாகவும், இருப்பினும் அந்த தொகையை செலுத்த முடியாமல் போகவே, தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |