ஜெட் ஸ்கையில் 190 மைல் பயணம்; சீனாவிலிருந்து தென் கொரியாவுக்கு கடக்க முயன்ற நபர் கைது
ஜெட் ஸ்கையில் 190 மைல் பயணித்து சீனாவிலிருந்து தென் கொரியாவுக்கு கடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 190 மைல் தூரம் ஜெட் ஸ்கை மூலம் மஞ்சள் கடலை கடக்க முயன்ற 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சீன குடிமகன் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 16 அன்று இரவு 10:30 மணிக்கு இன்சியான் போர்ட் குரூஸ் டெர்மினல் அருகே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை.அவரிடமிருந்து லைப் ஜாக்கெட், ஹெல்மெட், டெலஸ்கோப், திசைகாட்டி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
18.5 கேலன் எரிபொருள் நிரப்பப்பட்ட 1800சிசி ஜெட் ஸ்கையில் அவர் சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெற்று கொள்கலன்களை கடலில் வீசுவதற்கு முன்பு அந்த நபர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப பின்புறத்தில் உள்ள கேனிஸ்டர்களைப் பயன்படுத்தியதாக இன்சியான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இரவு 8 மணியளவில் ஜெட் ஸ்கை பற்றி அறிவிக்கப்பட்டதாக இன்சியான் கடலோர காவல்படை கூறியது. இரவு 9:30 மணியளவில் தனது வாகனம் சேற்றில் சிக்கியதாக அழைப்பு வந்ததாகவும், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் கடலோர காவல்படை கூறியது.
உதவியின்றி தனியாக தென்கொரியாவிற்குள் செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இதற்கு முன் கொரியாவில் தங்கியிருந்து பலமுறை இஞ்சியோனுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் விவரங்களை தொடர்ந்து விசாரித்து வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயரை கொரிய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், கைது செய்யப்பட்டவர் மனித உரிமை ஆர்வலர் குவான் பியோங் (Kwon Pyong) என சந்தேகிக்கப்படுவதாக சீனாவின் ஆர்வலர் லீ டே-சியோன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
South Korea arrests man who traveled 190 miles from China by jet ski, human rights activist, Kwon Pyong, jet ski