முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை இம்மாதம் இறுதியில் ஏவும் தென் கொரியா
தென்கொரியா அதன் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை இம்மாதம் ஏவுகிறது.
தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை நவம்பர் 30-ம் திகதி விண்ணில் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன், வடகொரியா அதன் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளையும் ஏவியது, ஆனால் அந்த பணி பெரும் தோல்வியை சந்தித்தது. வடகொரியா தனது எதிரிகளை குறிவைத்து அணு ஆயுதங்களை விரிவுபடுத்த முயற்சித்து வரும் அதே வேளையில், தென் கொரியா தனது முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவு செயற்கைக்கோளை இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.
வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த மூன்றாவது முயற்சியை மேற்கொள்வதாக முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பணி தோல்வியடைந்தது. இந்நிலையில் தென் கொரியா இத்திட்டத்தை அறிவித்தது.
நாட்டின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து நவம்பர் 30ஆம் திகதி ஏவப்படும் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியோன் ஹா கியூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் சுமந்து செல்லும். ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தத்தின் கீழ் தென் கொரியா தனது பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 2025-க்குள் மேலும் நான்கு உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென் கொரியாவிடம் தற்போது ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் எதுவும் இல்லை, தற்போது வட கொரியாவின் நகர்வுகளை கண்காணிக்க அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களை நம்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
South Korea lainch first military spy satellite, November 30, SpaceX's Falcon 9 rocket