அதிகரிக்கும் பதற்றம்: 17 ஆயிரம் பதுங்குக் குழிகளை பார்வையிட்ட தென் கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி யூம் சுக் யோல் ராணுவ வீரர்கள் தங்கும் பாதாள அறையை சமீபத்தில் பார்வையிட்டுள்ளார்.
பாதாள அறைகள்
தென் கொரிய ஜனாதிபதி யூம் சுக் யோல் பூமிக்கடியில் ராணுவ வீரர்களுக்காக கட்டமைக்கப்பட்ட பாதாள அறைகளை பார்வையிட்டார்.
வட கொரியாவுடன் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், தென் கொரியாவில் மொத்தம் 17 ஆயிரம் பதுங்குக் குழிகள் பூமிக்கடியில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் கூட்டு ராணுவ பயிற்சி
ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை பார்வையிட்ட கையோடு ஜனாதிபதி யூம் சுக் யோல் அங்கிருந்தே அமெரிக்கா மற்றும் தென் கொரிய அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார்.
நாளுக்கு நாள் வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து பிரமாண்ட ராணுவ கூட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |