வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்கொரியா புதிய திட்டம்! கையெழுத்திட்ட ஜனாதிபதி
அண்டை நாடான வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா டிரோன்களை தயாரிக்கும் திட்டத்தில் ஜனாதிபதி யூன்-சுக்-இயோல் கையெழுத்திட்டார்.
டிரோன் தயாரிப்பு
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர் ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. மேலும், அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் மீது டிரோன் தாக்குதல்களையும் நடத்திய அச்சுறுத்தலை உண்டாக்கியதாக செய்தி வெளியானது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து வடகொரியாவை சமாளிக்கவும், தங்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் தென்கொரிய அரசு டிரோன்களை உருவாக்க முடிவு செய்தது.
Getty Images/iStockphoto
கடந்த மாதம் இதற்கான கொள்கை அந்நாட்டு இராணுவத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் தென்கொரிய ஜனாதிபதி யூன்-சுக்-இயோல் டிரோன்களை தயாரிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை
இந்நிலையில் இதுதொடர்பாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'டிரோன்களை பயன்படுத்துவதன் மூலம் போர்க்களத்தில் முறையாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடகொரியாவின் போர் நடவடிக்கைகளை கண்காணிக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP-Yonhap

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |