பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்தால் நேர்ந்த விபரீதம்! 5000 பேரை தனிமைப்படுத்திய நாடு!
ஸ்பெயினில் ஹை ஸ்கூல் மணர்கள் நடத்திய பார்ட்டி காரணமாக ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மத்தியதரைக் கடல் தீவான மல்லோர்காவில், கடந்த வாரம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் முடிவந்ததைக் கொண்டாடும் விதமாக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பார்ட்டி நடத்தினர்.
இந்த கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சி, ஆட்டம்-பாட்டம், விருந்து என அனைத்தும் இருந்தன. இதில் ஸ்பெயின் மாணர்வர்களுடன், வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பதின்ம வயது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கொண்டாட்டம் ஸ்பெயின் மக்களுக்கு தற்போது மிகப்பெரிய விபரீதமாக மாறியுள்ளது. ஒரு பெரிய கோவிட்-19 வெடிப்பை இந்த கொண்டாட்டம் தூண்டியுள்ளது.
பரிசோதனை செய்யப்பட்டதில், விழாவில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 1,200 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் அவசர சுகாதார பதில் ஒருங்கிணைப்பாளர் பெர்னாண்டோ சிமான் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தொடர்புடைய கிட்டத்தட்ட 5,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களில் பெரும்பாலானோர் 40 முதல் 45 வயதுக்கு உடப்பட்டவர்கள் ஆவர். ஸ்பெயினில் இன்னும் இந்த யத்துக்குட்பற்றவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.
மேலும், மெயின்லேண்ட் ஸ்பெயினின் 8 மாவட்டங்களில் 900-க்கும் மேற்பட்ட COVID-19 தொற்று பதிவாகியுள்ளன.