உங்களுக்கு கொரோனாவை பரப்ப போகிறேன்! குழந்தைகள் உட்பட 22 பேருக்கு பரப்பிய நபர்: எந்த நாட்டில் தெரியுமா?
ஸ்பெயினில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கொரோனா பரப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா இன்னும், உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாகும். இந்நிலையில், அங்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுமார் 22 பேருக்கு வேண்டுமென்றே கொரோனாவை பரப்பியயுள்ளார் என்பது தற்பொது தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மனாக்கோர் நகரைச் சேர்ந்த அந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அவரது உடல் வெப்பமும் 40 டிகிரி செல்சிஸாக இருந்துள்ளது.
இப்படி கொரோனா அறிகுறிகள் இருந்தும் அவர், வீட்டின் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பணிக்குச் சென்றுள்ளார். அவரால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவலாம் என்பதால் அவருடன் பணிபுரிபவர்களை அந்த நபரை வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அவர் வீட்டுக்குச் செல்லாமல் தொடர்ந்து அலுவலகத்திலேயே இருந்துள்ளார். அன்று மாலை, அவர் கொரோனா பரிசோனை எடுத்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்னரும் அந்த நபர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. இதையடுத்து, மறுநாளும் அவர் வேலைக்குச் சென்றுள்ளார். இத்துடன் நிற்காமல் அங்கு இருந்து ஜிம்மிற்கு வேறு அவர் சென்றுள்ளார்.
ஜிம்மிலும் அவரது உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால், அவரை வீட்டுக்குச் செல்லுமாறு ஜிம் உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையெல்லாம் மதிக்காமல், அவர் உங்களுக்கு எல்லாம் கொரோனாவை பரப்பு போகிறேன்' என்று கூறியவாறே மாஸ்க்கை கழற்றிவிட்டுத் தும்மியுள்ளார்.
மறுநாள் அவருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருடன் பணிபுரியும் மூன்று பேர், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரவியது உறுதியானது.
அதேபோல ஜிம்மிலும் சிலருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேருக்கு அந்த நபரின் அலட்சியத்தால் கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து ஸ்பெயின் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.