ராணுவ பயிற்சியில் 17 வயது இளவரசி: 3 ஆண்டு பயிற்சி குறித்து லியோனோர் வெளிப்படை
17 வயதே ஆன ஸ்பெயின் இளவரசி லியோனோர் 3 ஆண்டுகள் கடுமையான இராணுவ பயிற்சியை எடுத்துக் கொள்ள உள்ளார்.
ராணுவத்தில் சேரும் இளவரசி
ஸ்பெயின் நாட்டின் அரச குடும்பத்தின் அடுத்த சிம்மாசன வாரிசான லியோனோர், தன்னுடைய 17 வயதில் 3 ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ பயிற்சியில் இணைந்துள்ளார்.
ஸ்பெயின் ஆயுதப் படைகளின் வருங்கால தளபதியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 3 ஆண்டுகளை உள்ளடக்கிய கடுமையான இராணுவ பயிற்சியில் இளவரசி லியோனோர் நேற்று இணைந்தார்.
Zaragoza Spain, August 17, Princess Leonor went to military training for next three years ? pic.twitter.com/LHdEzuzjek
— leonor_spainprincess (@leonor_deborbon) August 17, 2023
மன்னர் பெலிப்பின் மூத்த மகளான லியோனோர் வரும் அக்டோபர் மாதம் தன்னுடைய 18 வயதினை அடைகிறார்.
3 ஆண்டுகள் பயிற்சி
தன்னுடைய தந்தையான மன்னர் பெலிப், ராணி லெடிசியா மற்றும் சகோதரி சோபியா ஆகியோருடன் இராணுவ பயிற்சிக்காக ஜராகோசாவில் உள்ள இராணுவ அகாடமிக்கு இளவரசி லியோனோர்(Princess Leonor) நேற்று வந்தடைந்தார்.
இங்கு தன்னுடைய முதல் ஆண்டை இளவரசி நிறைவு செய்துவிட்டு, பின்னர் கடற்படை பள்ளியில் இரண்டாம் ஆண்டை தொடருவார், இறுதியாக ஜெனரல் ஏர் அகாடமியில் தனது மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து தனது இராணுவ படிப்பை இளவரசி லியோனோர் முடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜராகோசாவில் செய்தியாளர்களை சந்தித்த இளவரசி லியோனோர், இந்த ஆண்டை மிகவும் உற்சாகமாக எதிர்கொண்டேன், இருந்தும் தற்போது சற்று பதற்றமாகவே இருப்பதாக தெரிவித்தார்.
La Princesa de Asturias, en su primer día en la Academia General Militar de Zaragoza.
— Casa de S.M. el Rey (@CasaReal) August 18, 2023
➡️https://t.co/1hhg1pw3f3 pic.twitter.com/fbLiuUVInF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |