குரங்கம்மைக்கு இன்னொரு உயிர் பலி., 24 மணிநேரத்தில் இரண்டாவது மரணம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் குரங்கம்மை வைரஸால் மற்றோருவர் உயிரிழந்தார்.
ஸ்பெயினில் 24 மணி நேரத்திற்குள் குரங்கம்மை வைரஸ் பாதிப்பால் 2-வது மரணத்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று ஒரு இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அடுத்த நாளில் மற்றோரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் மொத்தம் 4,298 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்ததாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டு மரணங்கள் தொடர்பிலும் "தொற்றுநோயியல் தகவல்களை" சேகரிப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் கூறியது.
இதற்கு முன்பாக அப்பிரிக்காவிற்கு வெளியே, பிரேசில் நாட்டில் முதல் குரங்கம்மை தொடர்பிலான உயிரிழப்பு வெள்ளிக்கிழமையன்று பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவந்த குரங்கம்மை தொற்றானது, அந்த நாடுகளுக்கு வெளியே தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் குரங்கம்மை தொற்றுக்கு ஐவர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.