கடற்கரையில் தலை இல்லாத பிஞ்சு குழந்தையின் சடலம்: புலம்பெயர் மக்கள் படகு விபத்தில் அதிர்ச்சி திருப்பம்
ஸ்பெயின் நாட்டில் கடற்கரையில் தலை இல்லாத பிஞ்சு குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட குழந்தை
கடந்த ஏப்ரல் மாதம் புலம்பெயர் மக்கள் படகு விபத்து ஏற்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் அழுகிய, தலை துண்டிக்கப்பட்ட குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
@reuters
முதற்கட்ட தகவலில், குழந்தையின் வயது 2 முதல் 3 இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது 8 மாத பிஞ்சு குழந்தை என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர். மேலும் இறக்கும் போது குழந்தைக்கு 6 மாதம் எனவும் உரிய சோதனைகளுக்கு பின்னர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 6ம் திகதி பலேரிக் தீவுகளுக்கு அருகே புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தொடர்புடைய குழந்தையும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குழந்தை உட்பட 8 பேர்களின் சடலம்
அந்த விபத்தில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள குழந்தையின் பெற்றோர் உட்பட 15 பேர்கள் மரணமடைந்தனர். அல்ஜீரியாவின் செர்செல் பகுதியில் இருந்து மார்ச் 21ம் திகதி புறப்பட்ட அந்த மரப்படகு 17 நாட்கள் கடலில் பயணப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளது.
@solarpix
இந்த நிலையில், குறித்த பெண் குழந்தை உட்பட 8 பேர்களின் சடலம் இதுவரை மீட்கபட்டுள்ளது. தலை இல்லாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, டி.என்.ஏ சோதனை முன்னெடுக்கப்பட்டு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |