உலகில் முதல்முறையாக 1 வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை!
உலகிலேயே முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குழந்தை இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் வீட்டில் சரியான நிலையில் உள்ளது.
ஸ்பெயின் நாட்டில், இதய செயலிழப்பால் இறந்த நன்கொடையாளரிடமிருந்து 1 வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமான குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மாட்ரிட்டின் லா பாஸ் மருத்துவமனை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
மேலும், "குழந்தை இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் வீட்டில் சரியான நிலையில் உள்ளது" என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளாவிய முன்னணியில் உள்ளது, 2021-ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்களில் 102 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
EFE
குழந்தை, எம்மாவிற்கு (Emma) ஒரு மாத வயதில் குடல் செயலிழந்திருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடல் மிகவும் குறுகியதாக இருந்தது, மேலும் பல உள்ளுறுப்பு மாற்று சிகிச்சை பெறும் வரை அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
குடலைத் தவிர, குழந்தை எம்மாவிற்கு புதிய கல்லீரல், வயிறு, மண்ணீரல் மற்றும் கணையமும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. எம்மாவுக்கு இப்போது 17 மாதங்கள் ஆகிறது.
அம்மாவின் தாய், "எம்மா மிகவும் தைரியமானவர், தொடர்ந்து வாழ விரும்புகிறார் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்" என்று கூறினார். மேலும், நன்கொடையாளரின் குடும்பத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
EFE
இதயத் துடிப்பு மற்றும் சுவாச செயல்பாடுகள் இல்லாததை மருத்துவர்கள் உறுதி செய்த பிறகு, இறந்த நபரிடமிருந்து அசிஸ்டோல் தானம் செய்யப்படுகிறது.
நன்கொடையாளரின் உறுப்புகள் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் இல்லாத போதிலும், எக்ஸ்ட்ராகார்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம் (ECMO) எனப்படும் அமைப்பு மூலம் செயற்கையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
Reuters