சுற்றுலா தீவில் மருத்துவரை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த நபர்: ஸ்பானிஷ் நடிகரின் மகன் கைது
தாய்லாந்து தீவில் மருத்துவர் ஒருவரை துண்டுதுண்டாக வெட்டி கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து தூக்கி வீசிய இளைஞர் ஒருவரை அந்த நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மருத்துவரை கொன்று வீசிய சம்பவம்
தாய்லாந்தின் சுற்றுலா தீவான கோ பங்கனில்(Koh Phangan) கொலம்பியன் அறுவை சிகிச்சை மருத்துவர் எட்வின் அரியேட்டா ஆர்டேகா(44) என்பவரை யூடியூப் சமையல் கலைஞரான டேனியல் சாஞ்சோ ப்ரோஞ்சலோ(Daniel Sancho Bronchalo, 29) என்ற நபர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.
அத்துடன் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து கடலிலும் நிலத்திலும் தூக்கி வீசியுள்ளார். மருத்துவர் காணாமல் போனது தொடர்பான புகாரின் அடிப்படையில் தேடுதலை நடத்திய பொலிஸார், டேனியல் சாஞ்சோ-வை சாமுய் தீவில் வைத்து கைது செய்துள்ளனர்.
AP
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டேனியல் சாஞ்சோ கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார், ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதை ஏற்க மறுத்தார்.
AP
ஆனால் இந்த கொலை சம்பவம் அரங்கேறுவதற்கு முன்னதாக மருத்துவர் எட்வின் அரியேட்டா மற்றும் யூடியூப் சமையல் கலைஞரான டேனியல் சாஞ்சோ இருவரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர், மற்றும் டேனியல் சாஞ்சோ கத்தி ஒன்றை வாங்கியுள்ளது உறுதி ஆகியுள்ளது என பொலிஸ் கண்காணிப்பாளர் சரண்யு சம்னான்ரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளியான டேனியல் சாஞ்சோ ஸ்பானிஷ் திரைப்பட நட்சத்திரங்களான ரோடால்போ சாஞ்சோ மற்றும் சில்வியா ப்ரோஞ்சலோ ஆகியோரின் மகன் என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |