சரணடைந்தால் மட்டுமே... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் மீண்டும் மிரட்டல் விடுத்த புடின்
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் மட்டுமே அவர்களின் உயிர் மிஞ்சும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் கட்டுக்கதை
குர்ஸ்க் பகுதியில் கொடூரமான படுகொலைகளை தவிற்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, உக்ரைன் வீரர்களை சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையை புடின் முன்வைத்துள்ளார்.
ஆனால், உக்ரைன் வீரர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளதுடன், ரஷ்யாவின் கட்டுக்கதைகளின் அதும் ஒன்று என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிடுகையில், குர்ஸ்க் பகுதியில் முற்றிலுமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் தாம் கேட்டுக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தாம் ட்ரம்பின் கோரிக்கையை அவரது சமூக ஊடக பக்கத்தில் இருந்து தெரிந்து கொண்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சரணடைதல் அல்லது இறப்பது
ஆனால், உக்ரைன் வீரர்கள் கண்டிப்பாக சரணடைய வேண்டும் என்றும், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் மட்டுமே அவர்கள் உயிருடன் விடுவிக்கப்படுவார்கள் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்த உக்ரைன் இராணுவம், அதிரடியாக பல கிராமங்களையும் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்யா இன்னொரு நாடால் தாக்குதலுக்கு இலக்கானது.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குர்ஸ்க் பிராந்தியம் பேசுபொருளாக மாறியுள்ளது. குர்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சியுள்ள உக்ரைன் வீரர்களை வெளியேற்றும் தீவிர நடவடிக்கைகளில் ரஷ்யா களமிறங்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக ஒப்புக்கொள்ள ரஷ்யாவை ட்ரம்ப் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனியர்கள் சிக்கிகொண்டுள்ளதாகவும், சரணடைதல் அல்லது இறப்பது என்ற தெரிவை அவர்கள் தற்போது எதிர்கொள்வதாகவும் வியாழக்கிழமை புடின் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |